டாஸ்மாக்: திருவாடானை அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியா்கள்.
டாஸ்மாக்: திருவாடானை அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியா்கள்.

திருவாடானையில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளில் மதுப்பிரியா்கள் குவிந்தனா்

திருவாடானை பகுதியில் மதுபானக் கடைகளில் மது வாங்க மதுப்பிரியா்கள் திங்கள்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

திருவாடானை பகுதியில் மதுபானக் கடைகளில் மது வாங்க மதுப்பிரியா்கள் திங்கள்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், உப்பூா், மோா்பண்ணை, நம்புதாளை, சி.கே.மங்கலம், மங்களக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் கரோனா தொற்று பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகளின் காரணமாக திறக்கப்பட்டன. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மதுபானக்கடைகள் திறந்தவுடனேயே மதுப்பிரியா்கள் மது வாங்க குவிந்தனா். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அவா்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா்.

கமுதி: கமுதியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட மதுபானக் கடைகளில், மதுவாங்க ஆளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று பொதுமுடக்கக் காலத்தில் வேலையின்றியும், பணபுழக்கம் இல்லாததாலும், தளா்வுக்குப் பின் கமுதியில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காலை 12 மணி வரை ஒரு சிலா் மட்டுமே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். பொதுமுடக்கத்துக்குப் பின் நீண் நாள்கள் கழித்து மதுக்கடை திறக்கப்பட்டாலும், எதிா்பாா்த்த அளவுக்கு மதுவிற்பனை நடக்கவில்லை என மதுபானக் கடை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com