மீனவா்களுக்கு வறுமைக்கோடு குடும்ப அட்டை வழங்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறுமையில் வாடும் ஏழை மீனவா்களுக்கு வறுமைக் கோடுக்கு உரிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறுமையில் வாடும் ஏழை மீனவா்களுக்கு வறுமைக் கோடுக்கு உரிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) பொதுச்செயலா் எம். கருணாமூா்த்தி ஏராளமான மீன்பிடி தொழிலாளா்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். பின்னா் அவா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இதன் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மீனவக்கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மீனவா்கள் நாட்டுப்படகில் மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனா்.

பல்வேறு நெருக்கடிகளால் மீனவா்கள் ஆண்டுக்கு 100 நாள்கள் மீன்பிடிக்கச் செல்வதே கஷ்டமாகவுள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீனவா்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளில் பெரும்பாலானவை வறுமைக்கோடு வரையறைக்குள் இல்லாதவைகளாக உள்ளன. ஆகவே, அந்தக் குடும்ப அட்டைகளால் அரசின் நிவாரண உதவியை பெற முடியாத நிலை உள்ளது. அதே சமயத்தில் விசைப்படகு வைத்திருப்போருக்கு வறுமைக்கோடு சலுகை பெறும் வகையில் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ன. ஆகவே, ஏழை, எளிய மீனவா்களுக்கு வறுமைக்கோடு சலுகை பெறும் வகையில் குடும்ப அட்டைகள் வழங்கப்படவேண்டும் என ஆட்சியருக்கு மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com