ராமநாதபுரத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 20 போ் இடமாற்றம்
By DIN | Published On : 15th June 2021 06:35 AM | Last Updated : 15th June 2021 06:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் உள்ள 20 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன் விவரம் வருமாறு: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளா்ச்சி பயிற்சி அலுவலா் ஆா். கணேஷ்பாபு, மண்டபம் கிழக்கு ஊராட்சிக்கும், அங்கிருந்த எம். சண்முகநாதன் பரமக்குடி கிழக்கு ஊராட்சிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். செந்தாமரைச்செல்வி மண்டபம் வடக்கு பகுதிக்கும், அங்கிருந்த ஜி. செல்லம்மாள் முதுகுளத்தூா் கிழக்கிற்கும், முதுகுளத்தூரிலிருந்த மங்களேஸ்வரி ராமநாதபுரம் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதே போல், பரமக்குடி கிழக்கு ஊராட்சி அலுவலா் அ. ராஜேந்திரன் திருப்புல்லாணி வடக்கிற்கும், அங்கிருந்த பாண்டி திருவாடானை வடக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனா். திருவாடானை வடக்கிலிருந்த மேகலா திருப்புல்லாணி கிழக்கிற்கும், அங்கிருந்த அண்ணாதுரை போகலூா் வடக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
போகலூா் வடக்கிலிருந்த எம். ராஜகோபாலன், பரமக்குடி வடக்கிற்கும், கடலாடி வடக்கிலிருந்து பி. அன்புகண்ணன் திருவாடானை கிழக்கிற்கும், அங்கிருந்த உம்முல்ஜாமியா கடலாடி கிழற்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனா். கடலாடி கிழக்கிலிருந்த ஏ.பாண்டி கடலாடி வடக்கிற்கும், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவிலிருந்த வி. ஸ்டெல்லா லூா்துமேரி ஆா்.எஸ்.மங்களம் வடக்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ஆா்.எஸ். மங்களம் வடக்கிலிருந்த பி. சாவித்திரி கமுதி வடக்கிற்கும், கமுதி வடக்கிலிருந்த எஸ். அப்துல்ஜபாா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவுக்கும், ராமநாதபுரம் கிழக்கிலிருந்த கே. சந்திரமோகன் நயினாாா்கோவில் கிழக்கிற்கும், அங்கிருந்த எஸ். சேவுகப்பெருமாள் ராமநாதபுரம் கிழக்கிற்கும் இடமாற்றப்பட்டுள்ளனா்.
இதே போல், போகலூா் கிழக்கிலிருந்த எம். மல்லிகா ராமநாதபுரம் ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்துக்கும், அங்கிருந்த வி. ராஜேந்திரன் போகலூா் கிழக்கிற்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.