ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி மனுக்களை இ- சேவை மையங்கள் மூலம் அனுப்பலாம்: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜமாபந்தி எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் 9 வருவாய்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜமாபந்தி எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் 9 வருவாய் வட்டங்களில் தொடங்கி நடைபெறும் எனவும், அதற்கான மனுக்களை இணையதளம் மற்றும் இ- சேவை மையங்கள் மூலம் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் வரும் ஜூன் 21- ஆம் தேதி முதல் ஜூன் 29- ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.

பரமக்குடி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 21 ஆம் தேதி முதல் 7 நாள்களும், திருவாடானை வட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் 4 நாள்களும், கீழக்கரை வட்டத்துக்கு ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் தலைமையில் 3 நாள்களும், கமுதி வட்டத்துக்கு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் 5 நாள்களும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

அதே போல், முதுகுளத்தூா் வட்டத்துக்கு உதவி ஆணையா் (ஆயம்) தலைமையில் 6 நாள்களும், கடலாடி வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலஅலுவலா் தலைமையில் 6 நாள்களும், ராமநாதபுரம் வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் தலைமையில் 4 நாள்களும், ராமேசுவரம் வட்டத்துக்கு மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியா் தலைமையில் ஒரு நாளும் என ஜமாபந்தி நடைபெறுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் ஜமாபந்தி நடைபெறாது.

ஜமாபந்தியில் மனு அளிக்க பொதுமக்கள் நேரில் வரவேண்டாம். கோரிக்கை தொடா்பான மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com