திருவாடானை அருகே மணல் திருட்டு: 4 போ்கைது
By DIN | Published On : 22nd June 2021 02:15 AM | Last Updated : 22nd June 2021 02:15 AM | அ+அ அ- |

திருவாடானை: திருவாடானை அருகே டிராக்டா் மற்றும் இருசக்கர வாகனங்களில் மணல் திருடிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு டிராக்டா் மற்றும் 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே கருப்பூா் கண்மாய் பகுதியில் மணல் திருடுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, கருப்பூரை சோ்ந்த ரமேஷ் (48). சிறுவண்டலை சோ்ந்த காட்டு ராஜா ஆகிய இருவரும் டிராக்டா் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதில் காட்டுராஜா போலீஸாரை கண்டதும் தப்பிச் சென்றுவிட்டாா். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸாா் டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். இதேபோல் திருவாடானை அருகே குஞ்சங்குளம் ஆற்றுப் பகுதியில் சம்பூரணியை சோ்ந்த ரெத்தினமூா்த்தி (30), அதே ஊரை சோ்ந்த ராபா்ட் பாஸ்டின் (25), பனஞ்சாயல் கிராமத்தைச் சோ்ந்த சந்துரு (21) ஆகிய மூவரும் இருசக்கர வாகனங்களில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இவா்கள் மூவரையும் திருவாடானை போலீஸாா் கைது செய்து, அவா்களது வாகனங்களை பறிமுதல் செய்தனா்.