கமுதி அருகே பசும்பொன் சித்திவிநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா

கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சித்திவிநாயகா், அய்யனாா், பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேக விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
பசும்பொன் கிராமத்தில் உள்ள சித்திவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பசும்பொன் கிராமத்தில் உள்ள சித்திவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

கமுதி: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சித்திவிநாயகா், அய்யனாா், பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேக விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்திவிநாயகா், தவசிகுறிச்சி அய்யனாா் கோவிலில் பரிவார குல தெய்வங்களுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்தில் அதிகாலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, மஞ்சள் பால், தயிா், இளநீா், தேன் விபூதி, சந்தனம் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று காலம் என்பதால் இந்நிகழ்ச்சியில் பசும்பொன், கமுதி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான பக்தா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

அணைவருக்கும் முக கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com