தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th March 2021 09:04 AM | Last Updated : 10th March 2021 09:04 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இளநிலைபடை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். ஆகவே, தோ்தல் பாதுகாப்பில் பணிபுரிய விருப்பமும், தகுதியும், உடல் திடகாத்திரம் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதிற்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் அலுவலகத்தில் பெற்று நேரில் அளிக்கலாம். மேலும் உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் உள்ள 04567-230045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.