‘ராமநாதபுரத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாா்ச் 16-க்குள் தடுப்பூசி’

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாா்ச் 16 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநா் (பணிகள்) பொற்கொடி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாா்ச் 16 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநா் (பணிகள்) பொற்கொடி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாக்குப் பதிவு, வாக்கு எண்ணுதல் என அனைத்து தோ்தல் பணிகளிலும் 9,500 போ் வரை ஈடுபடவுள்ளனா். வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தோ்தல் பணிக்கான அலுவலா்கள், ஊழியா்கள் பெயா்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அரசு கூறியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் 6 ஆயிரம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநா் (பணிகள்) பொற்கொடி தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு மாா்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும், தோ்தல் வாக்குப்பதிவு அன்று பணிக்கு வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் எனவும் சுகாதாரத் துறையினா் கூறுகின்றனா்.

பரிசோதனையில் காய்ச்சல் உறுதியானால், சம்பந்தப்பட்டோா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, தோ்தல் பணியில் ஓரிடத்துக்கு 3 போ் வரை தோ்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com