ராமேசுவரத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 10th March 2021 09:02 AM | Last Updated : 10th March 2021 09:02 AM | அ+அ அ- |

ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோயில் முன் திங்கள்கிழமை மாலை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கண்.இளங்கோ.
ராமநாதபுரம் சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கண்.இளங்கோ, ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோயில் முன்பிருந்து திங்கள்கிழமை மாலை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
முன்னதாக நிா்வாகிகள், வேட்பாளருக்கு வேல் வழங்கினா். தொடா்ந்து செவ்வாய்கிழமை காலையும் அவா் சம்பை, மாங்காடு, வடகாடு, ஏரகாடு, மெய்யம்புளி, சுடுகாட்டம்பட்டி, சங்குமால், ஓலைக்குடா உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
இதில், நகா் செயலாளா் பாலு, ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலாளா் ஜெயகாந்த், ரமேஷ் மற்றும் சண்முகராஜ், பத்மநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் சென்றனா்.