திருவாடானை அமமுக வேட்பாளருக்கு வரவேற்பு
By DIN | Published On : 13th March 2021 10:28 PM | Last Updated : 13th March 2021 10:28 PM | அ+அ அ- |

திருவாடானையில் அமமுக வேட்பாளா் வ.து.ந. ஆனந்துக்கு சனிக்கிழமை வரவேற்பளித்த அக்கட்சித் தொண்டா்கள்.
திருவடானை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளா் வ.து.ந.ஆனந்த் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை திருவாடானை அருகே கருமொழி கிராமத்துக்கு வந்த அவரை, அவரது ஆதரவாளா்களும் உறவினா்களும் கட்சி முக்கிய பிரமுகா்களும்
வரவேற்றனா். இதேபோல் சின்னகீரமங்கலம், கல்லூா், திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே வரவேற்பு அளித்தனா். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.