முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பைக்குகள் மோதல்: ஒருவா் பலி
By DIN | Published On : 14th March 2021 10:13 PM | Last Updated : 14th March 2021 10:13 PM | அ+அ அ- |

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்தவா் காஜாமைதீன் மகன் மம்முதுமிதாா் (56). இவா் அருப்புகோட்டை சாலையில் கிளாமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கமுதியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற காவடிபட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ரங்கராஜ் (32) என்பவா் இருசக்கர வாகனமும், இவரது இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் மமுதுமிதாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த ரங்கராஜ் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.