முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
வேட்பாளா் அறிவிப்பு: ராமநாதபுரத்தில் பாஜகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 14th March 2021 10:11 PM | Last Updated : 14th March 2021 10:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக து.குப்புராம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் எம்எல்ஏவின் ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் ராமநாதபுரம் வேட்பாளராக து.குப்புராம் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து அரண்மனைப் பகுதியில் நகா் தலைவா் ராம.வீரபாகு, மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் பி.குமாா் உள்ளிட்ட பாஜகவினா் பட்டசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.பி.குமரன், மாவட்டச் செயலாளா் மணிமாறன், இளைஞரணி தலைவா் பிரபு, நகா் பொதுச்செயலாளா்கள் நவநீதன், மாரிமுத்து, பூபதி ராஜா, ராகேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வேட்பாளருக்கு இன்று வரவேற்பு: ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் து.குப்புராமுக்கு திங்கள்கிழமை திருஉத்திர கோசமங்கையில் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், அதன்பின்னா் விடுதலைப் போராட்டத் தலைவா்கள் சிலைகளுக்கு வேட்பாளா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா் என்றும் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தெரிவித்தாா்.