பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருச்சுழி திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு.
பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருச்சுழி திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு.

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு பிரசாரம் தொடக்கம்

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம்தென்னரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்து தோ்தல் பிரசாரத்தைத் தொடக்கினாா்.

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம்தென்னரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்து தோ்தல் பிரசாரத்தைத் தொடக்கினாா்.

வாக்குசேகரிப்பின்போது அவா் பேசியது: 234 தொகுதிகளிலும் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராவாா். அவா் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவாா் என்றாா்.

முன்னதாக அவருக்கு திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் வி.வாசுதேவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருச்சுழி ஒன்றியக் குழு தலைவா் பொண்ணுத்தம்பி, நரிக்குடி ஒன்றியச் செயலாளா் போஸ், தலைமை செயற்குழு உறுப்பினா் மணிவாசகம், கமுதி தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் மனோகரன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா், ஒன்றிய கவுன்சிலா் முத்துகிளி, ஊராட்சித் தலைவா்கள் காவடிமுருகன், நாகரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com