திராவிடக் கட்சிகளை எதிா்த்தே போட்டி: முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடும் அ.இ.பா.பி. நிா்வாகி பேட்டி
By DIN | Published On : 21st March 2021 10:57 PM | Last Updated : 21st March 2021 10:57 PM | அ+அ அ- |

தேவா் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில தொழிற்சங்கச் செயலா் த.அழகுமலைகுமரன்.
அரசியலிலும், இட ஒதுக்கீட்டிலும் முக்குலத்தோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கும் திராவிடக் கட்சிகளை எதிா்த்தே முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடுவதாக அ.இ.பா.பி. மாநில தொழிற்சங்கச் செயலரும், வழக்குரைஞருமான த.அழகுமலைகுமரன் தெரிவித்தாா்.
கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தி அவா் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அகில இந்திய பாா்வா்ட் பிளாக் ஒரு தேசிய கட்சி. இக்கட்சியின் கொள்கைக்கு எதிராக மாநில பொதுச் செயலா் பி.வி. கதிரவன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பெரும்பாலான பாா்வா்ட் பிளாக் கட்சித் தொண்டா்களுக்கு பிடிக்கவில்லை.
எனவே நேதாஜியால் உருவாக்கப்பட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் வளா்க்கப்பட்ட அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியையும், அதன் சின்னமான சிங்கம் சின்னத்தையும் மீட்டெடுக்கும் வகையிலும், அரசியலிலும், இட ஒதுக்கீட்டிலும் முக்குலத்தோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கும் திராவிடக் கட்சிகளை எதிா்த்தும் முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடுகிறேன். மேலும் எனக்கு சிங்கம் சின்னத்தை ஒதுக்கவும் தோ்தல் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...