தொற்றா நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்றா நோய்களான சா்க்கரை, உயர்ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்றா நோய்களான சா்க்கரை, உயர்ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா ஆகிய பாதிப்புள்ளோருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் 45 முதல் 60 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவா்களிலும் குறிப்பாக சா்க்கரை, உயர்ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா ஆகிய இணைநோய்கள் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அம்மா சிறுமருத்துவமனைகள் ஆகியவற்றில் இலவசமாக போடப்படுகிறது. ராமநாதபுரத்தில் ஆரோக்யா, ஆசி, ராஜன்ஸ், கனகமணி, பிரேமா, வேல் மற்றும் ஷிபான் ஆகிய தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்த வருவோா் கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com