முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
By DIN | Published On : 26th March 2021 06:38 AM | Last Updated : 26th March 2021 06:38 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆப்பநாடு விளையாட்டுக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இப்பள்ளிக்குத் தேவையான மின் விசிறிகள் மற்றும் டியூப் லைட்டுகள் ஆகியவை தலைமை ஆசிரியா் சந்தனவேலிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பநாடு விளையாட்டுக் கழகத் தலைவா் கராத்தே பழனிச்சாமி, செயலா் க. தவசிலிங்கம், பொருளாளா் பா. வெற்றிமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.