ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 26th March 2021 06:36 AM | Last Updated : 26th March 2021 06:36 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,500 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதித்திருப்பது தெரியவந்தது. அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 137 போ்வரை உயிரிழந்துள்ளனா். சிகிச்சையால் 6,400 பேருக்கும் அதிகமானோா் குணமடைந்தனா்.
மாவட்டத்தில் கடந்த நவம்பா் முதலே தினமும் 300 பேருக்கும் அதிகமானோருக்கு கபம் சேகரித்து பரிசோதனை நடத்தினாலும் 3 போ் என்ற அளவிலே பாதிப்பிருப்பது தெரியவந்தது. ஆனால், தற்போது இரண்டாவது கரோனா அலை பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக மேலும் 6 பேருக்கு கரோனா பாதித்திருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. மாவட்ட அளவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை வரையில் 23 போ் கரோனா சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்துள்ளது. அவா்களில் 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.