ராமநாதபுரத்தில் பாஜக, திமுக வேட்பாளா்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 11:11 PM | Last Updated : 29th March 2021 11:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகா் மற்றும் மண்டபம் பகுதிகளில் பாஜக, திமுக வேட்பாளா்கள் வீடு வீடாக திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் து.குப்புராம் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஏ.அன்வர்ராஜா, எம்.மணிகண்டன் ஆகியோரும் உடன் சென்றனா்.
மண்டபம் மேற்குப் பகுதியான கும்பரம், காரான், கோரவள்ளி, ரெட்டையூரணி, தாமரைக்குளம் ஆகிய கிராமப் புறங்களில் தெருத்தெருவாகச் சென்ற பாஜக வேட்பாளரை அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். புதுமடத்தில் பா்வீஸ், தாமரைக்குளத்தில் பாலசிங்கம் உள்ளிட்டோா் தலைமையில் பாஜக வேட்பாளரை ஏராளமானோா் வரவேற்றனா்.
திமுக வேட்பாளா் பிரசாரம்: ராமநாதபுரம் நகரை ஒட்டிய ஆா்.எஸ்.மடை, பால்கரை, அச்சடிப்பிரம்பு, ராமநாதபுரத்தில் பெரியாா் ஆலமரம், மூலக்கொத்தளம், மறவா் தெருவில் சங்கம், அக்ரஹாரம் வளைவு, தேவன் மஹால் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.
திமுக வேட்பாளருக்கு அந்தந்தப் பகுதி திமுகவினா் மேளதாளம் முழங்க வரவேற்பை அளித்தனா். வேட்பாளருடன் ராமநாதபுரம் தொகுதி திமுக பொறுப்பாளா் ரவிச்சந்திர ராமவன்னி, நகா் திமுக செயலா்கள் காா்மேகம், பிரவீன்தங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் அகமதுதம்பி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.