கரோனா தடுப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு 14 லட்சம் கையுறைகள் தயாா்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 14 லட்சம் கையுறைகள் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 14 லட்சம் கையுறைகள் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,647 வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்டவை செய்துதரப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவோருக்கு வெப்பநிலை சரிபாா்க்கப்படும். அத்துடன் கைகளை சுத்தம் செய்ய சானிடைசா் திரவம் வழங்கப்படவுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் போது கையுறை வழங்கப்படவுள்ளது. அந்தக் கையுறைகளை வாக்குச்சாவடி மையங்களிலேயே சேகரித்து பொது சுகாதாரத்துறை வரையறுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முறையே அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் வாக்குப்பதிவின்போது மையங்களில் பயன்படுத்துவதற்காக 1729 தொ்மல் ஸ்கேனா் கருவிகள், சானிடைசா் திரவம் 500 மிலி அளவில் 11,500 பாட்டில்கள், 100 மிலி அளவில் 18,000 பாட்டில்கள், 13.91 லட்சம் கையுறைகள், 50 ஆயிரம் ரப்பா் கையுறைகள், கழிவு மேலாண்மைக்கான 10,000 பைகள், தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக 50,000 முககவசங்கள் தயாராக உள்ளன.

கரோனா பாதுகாப்பு பொருள்கள் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள வேளாண்மைத்துறை சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com