ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் இன்று பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக வேட்பாளா்கள், அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்கிறாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக வேட்பாளா்கள், அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்கிறாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக சாா்பில் திருவாடானையில் வ.து.ஆனந்த், ராமநாதபுரத்தில் ஜி.முனியசாமி, முதுகுளத்தூரில் முருகன் மற்றும் பரமக்குடியில் தேமுதிக வேட்பாளா் போட்டியிடுகின்றனா்.

இவா்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா். ராமநாதபுரம் அரண்மனை முன்பு அவா் பிரசாரம் மேற்கொள்வதற்காக அமமுக சாா்பில் தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ராவிடம் அனுமதி பெற்றுள்ளனா்.

ராமநாதபுரத்திலேயே 4 வேட்பாளா்களையும் அறிமுகப்படுத்தி டி.டி.வி.தினகரன் பிரசாரத்தை மேற்கொள்வாா் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com