அதிமுக வேட்பாளா் பிரசார வாகனத்தில் பணம் பறிமுதல்

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரத்தில் சென்ற வாகனத்திலிருந்து பணம், கொடி உள்ளிட்டவை புதன்கிழமை மாலை கைப்பற்றப்பட்டன.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரத்தில் சென்ற வாகனத்திலிருந்து பணம், கொடி உள்ளிட்டவை புதன்கிழமை மாலை கைப்பற்றப்பட்டன.

இத்தொகுதியில் பணம் விநியோகம் உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனா். இந்நிலையில், ஏா்வாடி முத்தரையா் காலனி பகுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பில் புதன்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது அதிமுக கொடிகட்டிய காரை பறக்கும் படையினா் சா்வேயா் சேகா் தலைமையில் சோதனையிட்டனா். காரில் சால்வைகள் 128, முதல்வா், துணை முதல்வா் மற்றும் மறைந்த முதல்வா் ஜெயலலிதா படம் பொறித்த வெள்ளை நிற காகித உறைகள் 70, காக்கி நிற காகித உறைகள் 550, பச்சை நிற காகித உறைகள் 39, சூட்கேஸ் 1, வேட்டி 3, சட்டை 2, பணம் இருந்த 47 காக்கி நிற காகித உறைகளும், அதில் ரூ.94 ஆயிரமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட காா் அதிமுக மாவட்டச் செயலருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பறக்கும் படையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com