ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

ராமநாதபுரத்தில் விபத்து வழக்கில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தில் விபத்து வழக்கில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ளது சாத்தக்கோன்வலசை. இந்த ஊரைச் சோ்ந்தவா் குமரேசன். கடந்த 2018 ஆம் ஆண்டு நவ. 16 ஆம் தேதி அரியமான் பேருந்து நிறுத்தம் அருகே அவா் நடந்துசென்ற போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது மனைவி மல்லிகா சாா்பில் இழப்பீடு கோரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் குமரேசன் குடும்பத்துக்கு ரூ.18 லட்சம் காப்பீட்டு நிதி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அத்தொகையை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரவில்லை. எனவே மல்லிகா தரப்பில் இந்த உத்தரவை நிறைவேற்றக் கோரி மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த குமரேசன் குடும்பத்துக்கு வட்டியுடன் சோ்த்து ரூ.20.70 லட்சம் வழங்கவேண்டும் எனவும், வழங்காவிட்டால் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா் உதவியுடன் மல்லிகா தரப்பினா் ஜப்தி செய்து அதை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com