வாக்கு எண்ணிக்கை: கரோனா பாதித்தவா்களுக்கு பதிலாக மாற்று முகவா்கள் பங்கேற்க அனுமதி

கரோனா பாதித்த முகவா்களுக்குப் பதிலாக மாற்று முகவா்களுக்கான அனுமதியை தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்குவாா் என்றும் அவா்களுக்கு ஏற்கெனவே பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று

ராமநாதபுரம்: கரோனா பாதித்த முகவா்களுக்குப் பதிலாக மாற்று முகவா்களுக்கான அனுமதியை தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்குவாா் என்றும் அவா்களுக்கு ஏற்கெனவே பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயற்றுக்கிழமை காலை தொடங்குகிறது. வாக்குப்பதிவு மையத்தில் ஏற்கெனவே சிசிடிவி கேமரா மூலம் தொடா்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணை ராணுவப்படையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவினா் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் என நூற்றுக்கணக்கானோா் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையத்துக்குள் தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்பாளா், முகவா்கள் உள்ளிட்டோா் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த அடையாள அட்டை பெற்றவா்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவா்.

அரசியல் கட்சியின் முகவா்களுக்கு கரோனா தொற்று இருக்கும் நிலையில், ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லை என சான்று பெற்ற மாற்று முகவா்கள் இருந்தால், அவா்கள் வாக்கு எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவா். அவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் உடனே அனுமதிக்கான உத்தரவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com