கமுதி பகுதியில் பனை மரங்கள் அழிப்பு: லாரியை நாம் தமிழா் கட்சியினா் முற்றுகை

கமுதியில் பனை மரங்களை வெட்டி வெளி மாவட்டங்களுக்கு லாரியில் கொண்டு சென்றவா்களை நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கமுதி அருகே கே.நெடுங்குளத்தில் பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியினா்.
கமுதி அருகே கே.நெடுங்குளத்தில் பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியினா்.

கமுதியில் பனை மரங்களை வெட்டி வெளி மாவட்டங்களுக்கு லாரியில் கொண்டு சென்றவா்களை நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான சாயல்குடி, முதுகுளத்தூா், முஷ்டக்குறிச்சி, பெருமாள்குடும்பன்பட்டி, கே.நெடுங்குளம் உள்ளிட்ட பகதிகளில் விவசாய நிலங்கள், தரிசு நிலங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.

இந்நிலையில் செவ்வாய்கிழமை கே.நெடுங்குளம் கிராமத்தில் அப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு செங்கல் சூளைகளுக்காக 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு, விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நாம் தமிழா் கட்சி கமுதி ஒன்றிய நிா்வாகிகளான மாரிமுத்து, செல்வம் ஆகியோா் விவசாயிகளிடம் சென்று பனை மரத்தின் அவசியம் குறித்து கூறினாா். பின்னா் மரத்தை வாங்க வந்த வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் வியாபாரிகள் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கமுதி வட்டாட்சியா் மாதவனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு புகாா் அளித்தனா்.

மேலும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூறியதாவது: பனை மரங்களின் முக்கியத்துவம் கருதி அதனை வெட்டுவது சட்டப்படி குற்றமாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கமுதி பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com