துணை ராணுவப் படையினருக்கு கரோனா பரிசோதனை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ராணுவப் படையினருக்கு ராமநாதபுரத்தில் இரண்டாவது நாளாக கரோனாப் பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காத்திருந்த துணை ராணுவப் படையினா். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடந்த மாா்ச் மாதம் நாகலாந்திலிருந்து துணை ராணுவப் படையினா் 80 போ் ராமநாதபுரத்துக்கு வந்தனா். இவா்கள் வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில் தோ்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து துணை ராணுவப் படையினா் மீண்டும் தங்களது மாநிலங்களுக்கு செல்லவுள்ளனா்.

இந்நிலையில் இவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com