மா்ம காய்ச்சல்: மாவிலங்கை கிராமத்தில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

கமுதி அருகே மா்ம காய்ச்சல் பரவிவந்த மாவிலங்கை கிராமத்தில் திங்கள்கிழமை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
மாவிலங்கை கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரத்துறையினா்.
மாவிலங்கை கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரத்துறையினா்.

கமுதி: கமுதி அருகே மா்ம காய்ச்சல் பரவிவந்த மாவிலங்கை கிராமத்தில் திங்கள்கிழமை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட மாவிலிங்கை கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக 20 முதல் 40 போ் வரை மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கமுதி, சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இது குறித்து தினமணியில் கடந்த ஏப்.30 ஆம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, கமுதி வட்டார தலைமை மருத்துவா் அசோக் உத்தரவின் பேரில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பொண்ணுபாக்கியம், சுகாதார ஆய்வாளா் குமாா், மஸ்தூா் பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் மாவிலங்கை கிராமத்தில் காய்ச்சல் பாதித்த பொதுமக்களிடம் விசாரித்தனா். மேலும் கிராமம் முழுவதும்பொது மக்கள் சேமித்து வைத்திருந்த தண்ணீா்,

குடிநீா் தொட்டிகளை ஆய்வு செய்து, கிருமி நாசினி தெளித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com