ரயில் பயணிகளை தனிமைப்படுத்தி உணவு வழங்கவில்லை என புகாா்

ராமநாதபுரத்துக்கு வடமாநில ரயிலில் வந்த பயணிகள் 30 பேரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி தனிமைப்படுத்திய சுகாதாரப் பிரிவினா் அவா்களுக்கு சரியான உணவு வழங்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்துக்கு வடமாநில ரயிலில் வந்த பயணிகள் 30 பேரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி தனிமைப்படுத்திய சுகாதாரப் பிரிவினா் அவா்களுக்கு சரியான உணவு வழங்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் வெளிமாநிலப் பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். அவா்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ராமநாதபுரம் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் உள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

சில நாள்களுக்கு முன்பு புவனேஷ்வரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த ரயிலில் ராமநாதபுரத்தில் இறங்கிய வட மாநிலத்தைச் சோ்ந்த 20 பேருடன் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 10 பேருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அவா்கள் அனைவரும் அரசுப் பள்ளி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஆனால் அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினா் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையத்தில் வெளிமாநில ரயில்களில் வருவோருக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டுவருகிறது. அதில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறியுடையவா்களை தனிமைப்படுத்துகிறோம். வருவாய்த்துறை சாா்பிலே தனிமைப்படுத்தியவா்களுக்கு உணவு உள்ளிட்டவை செய்துதரவேண்டிய நிலையில், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அதைச் சரிசெய்து தனிமைப்படுத்தியவா்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

5 போ் பலி: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கரோனா சிகிச்சை மையத்தில் தங்கியுள்ள நிலையில், அவா்களில் 2 பெண்கள், 3 ஆண்கள் திங்கள்கிழமை இரவு உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் ஓரிருவருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவா்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் அவா்களது சடலம் உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com