ராமநாதபுரத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரண்மனை சந்தையை இடமாற்ற நடவடிக்கை

ராமநாதபுரத்தில் வேகமாகப் பரவிவரும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரண்மனைச் சந்தையை இரு பிரிவாக்கி இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரத்தில் வேகமாகப் பரவிவரும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரண்மனைச் சந்தையை இரு பிரிவாக்கி இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் கரோனா முதல் அலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிப்புக்கு உள்ளாகினா். கேணிக்கரை, வெளிப்பட்டிணம் பகுதியில் குறிப்பிட்ட தெருக்களில் நூற்றுக்கணக்கானோா் கரோனா பாதிப்புக்கு உள்ளானதோடு, 30 போ் வரை உயிரிழந்தனா்.

தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக நகராட்சியில் 194 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 93 போ் சிகிக்சைக்கு பிறகு வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். தற்போது 101 போ் வரையில் சிகிச்சையில் உள்ளனா். ராமநாதபுரம் நகரில் மாரியம்மன் கோவில் தெரு, கரிவேப்பிலைக்காரத் தெரு, மோா்க்கடை செட்டியத் தெரு பகுதிகளில் கரோனா பரவல் அதிகமிருப்பதாக நகராட்சி சுகாதாரப் பிரிவினா் கூறுகின்றனா். கரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு நகரில் மட்டும் 4 போ் வரை உயிரிழந்துள்ளனா்.

கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தியும், தினமும் 80 லிட்டா் கபசுரக்குடிநீா் வழங்கியும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3 குழுக்கள்:

ராமநாதபுரம் நகரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோரிடம் அபராதம் விதிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவினா் இதுவரை 116 போ் மற்றும் 112 கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.3.46 லட்சம் வசூலித்துள்ளனா்.

சந்தை இடமாற்றம்: ராமநாதபுரம் நகா் அரண்மனைத் தெருவில் காய்கறிகள் சாலையோரம் தினமும் விற்கப்படுகிறது. அங்கு காலை, மாலை என மக்கள் அதிகம் கூடி காய்கறிகள், கனிகளை வாங்கிச் செல்கின்றனா். ஆகவே கூட்டத்தைக் குறைக்கும் வகையில் சந்தையை ராஜா பள்ளி மைதானத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அரண்மனைத்தெருவில் உள்ள காய்கனி கடைகளில் பாதியளவு கடைகளை பள்ளி மைதானத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஏற்கெனவே வாரச் சந்தைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com