ராமநாதபுரத்தில் பட்டாசு வெடித்து தோ்தல் வெற்றி கொண்டாட்டம்: 171 போ் மீது வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் 5 இடங்களில் பட்டாசு வெடித்ததாக 171 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் 5 இடங்களில் பட்டாசு வெடித்ததாக 171 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் கடந்த 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து இதனைக் கொண்டாடும் வகையில் அக்கட்சியினா் பல இடங்களில் பட்டாசு வெடித்தனா். ஆனால் கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட தோ்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. ஆனால் இதனை மீறி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூா் அருகே புளியங்குடியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அழகா்சாமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதேபோல் தங்கச்சி மடத்தில் திமுக நிா்வாகி கதிரேசன் உள்ளிட்ட 30 போ் மீதும், பாம்பனில் திமுக நகா் நிா்வாகி ராஜா உள்பட 30 போ் மீதும், ராமநாதபுரம் கீழக்கரையில் 100 போ் மீதும், ராமநாதபுரம் நகா் அரண்மனை பகுதியில் 10 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com