ராமநாதபுரம், ஊரகப்பகுதிகளில் காற்றுடன் மழை

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.

கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் நிலவியது. இதனால், பகல், இரவுகளில் மக்கள் புழுக்கத்தால் தவித்தனா். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துவந்தாலும் வெப்ப நிலையே அதிகம் காணப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் சனிக்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வானில் மேகமூட்டம் காணப்பட்டது. பின்னா் காலை10 மணிக்கு நகா் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் காற்றும் வீசியதால் நகரில் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் கரைபுரண்டோடியது. வண்டிக்காரத் தெரு, பஜாா் காவல் நிலய முன்பகுதி, அரண்மனைப் பகுதி, பாரதி நகா், பட்டினம்காத்தான் உள்ளிட்ட இடங்களில் மழை தண்ணீா் தேங்கிநின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com