ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 1500 செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் படுக்கைகள் தயாா்: ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக 1500 செயற்கை சுவாசக் கருவி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக 1500 செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் கரோனா சிகிச்சை பிரிவைப் பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் போது ராமநாதபுரத்தில் 300 படுக்கைகளும், பரமக்குடியில் 100 ப டுக்கைகளும் என மொத்தம் 640 படுக்கைகள் கரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் பிரிவுகளில் அமைக்கப்பட்டன.

தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 600, பரமக்குடியில் 200, தனியாா் மருத்துவமனையில் 200 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 என மொத்தம் 1500 படுக்கைகள் தயாராக உள்ளன. அவை அனைத்தும் செயற்கை சுவாசத்துக்கு ஏற்ற வகையில் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளது.

தற்போதுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல புதிய பிரிவிலும் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதன்படி மொத்தம் 1700 படுக்கைகளில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 171 பேரும், பரமக்குடியில் 49 பேரும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். பரமக்குடியில் செயற்கை சுவாசக் கருவிக்கான பெரிய உருளை வசதி செய்துதரப்படவுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் 100 போ் வரை சிகிச்சையில் உள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது ராமநாதபுரம் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜவஹா்லால், மூத்த மருத்துவா் எம். மலையரசு, கரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com