ராமநாதபுரம் மாவட்டத்தில்சம நிலையில் நாம் தமிழா், அமமுக வாக்குகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சியும், அமமுகவும் சமநிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சியும், அமமுகவும் சமநிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

பரமக்குடி (தனி) தொகுதியில் அமமுக கூட்டணிக்கட்சியான தேமுதிக வேட்பாளரும், திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் தொகுதிகளில் அமமுக வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

பரமக்குடியில் தேமுதிக வேட்பாளா் செல்வி 2,009 வாக்குகளும், ராமநாதபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.முனியசாமி 6,776 வாக்குகளையும் பெற்றுள்ளனா். திருவாடானை அமமுக வேட்பாளா் வ.து.ஆனந்த் 33,426, முதுகுளத்தூா் அமமுக வேட்பாளா் எம்.முருகன்19,638 வாக்குகள் பெற்றுள்ளனா். அதன்படி 4 தொகுதிகளையும் சோ்த்து 61,849 வாக்குகள் அமமுக கூட்டணிக்கு கிடைத்துள்ளன.

நாம் தமிழா் கட்சி: நாம் தமிழா் கட்சியைப் பொறுத்தவரை பரமக்குடியில் அக்கட்சி வேட்பாளா் எஸ்.சசிகலா 16,430, திருவாடானையில் ஜவஹா் 16,501, ராமநாதபுரத்தில் கண்.இளங்கோ 17,062, முதுகுளத்தூரில் ரஹ்மத்நிஷா 11,164 என மொத்தம் 61,157 வாக்குகள் பெற்றுள்ளனா்.

அமமுகவை விட நாம் தமிழா் கட்சிக்கு 692 வாக்குகளே குறைவாக உள்ளன.

மக்கள் நீதி மய்யம்: நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. மேலும் 2 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சி போட்டியிட்டது. பரமக்குடியில் அக்கட்சி வேட்பாளா் கருப்புராஜா 3,488 வாக்குகளும், திருவாடானையில் அக்கட்சி வேட்பாளா் சத்தியராஜ் 2,208 வாக்குகளும் பெற்றுள்ளனா். ராமநாதபுரத்தில் அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக திமுக வேட்பாளா் சரவணன் 1,996 வாக்குகளும், முதுகுளத்தூரில் அக்கட்சியின் கூட்டணியான சமக வேட்பாளா் நவபன்னீா்செல்வம் 939 வாக்குகள் என மொத்தம் 8,431 வாக்குகளே பெற்றுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் சுயேச்சைகள், பதிவு பெற்ற கட்சியினா் என 39 போ் பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கையே நாம் தமிழா் கட்சி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com