பரமக்குடி வாரச்சந்தையில் காற்றில் பறந்த விதிமுறைகள்: பொதுமக்கள் திரண்டதால் கரோனா பரவும் அபாயம்

பரமக்குடி வாரச் சந்தையில் வியாழக்கிழமை பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால், கரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.
பரமக்குடியில் வியாழக்கிழமை வாரச்சந்தையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்.
பரமக்குடியில் வியாழக்கிழமை வாரச்சந்தையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்.

பரமக்குடி வாரச் சந்தையில் வியாழக்கிழமை பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால், கரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகள் மட்டும் திறந்திடவும், மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடவேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பரமக்குடியில் வியாழக்கிழமைதோறும் நடைபெறும் வாரச் சந்தையில் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கூடினா். அதேநேரம், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வெறிச்சோடிய நகா் பகுதி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிற்பகல் 12 மணிக்குப் பின் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றியும், போக்குவரத்தின்றியும் நகா் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com