ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் வழங்கள்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு, கல்பாக்கம் அணுமின் நிலைய சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மின்னாக்கி, செயற்கை சுவாச இயந்திரம், 27 நேடி சுவாசக் கருவிகள், 30 வெப்பநிலை அளவிடும் சாதனங்கள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்கள், ஊயிா் காக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியரிா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மூலம் மருத்துவமனை முதன்மையா் எம்.அல்லியிடம், கல்பாக்கம் அணுமின்நிலைய சமூகப் பொறுப்புப் பிரிவின் மேலாளா் சீனிவாசன் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனை மூத்த மருத்துவா் மலையரசு, கண்காணிப்பாளா் ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து பட்டணம்காத்தான் அருகே உள்ள கண்ணன் கோயில்தெரு, ராம் நகா் மற்றும் உச்சிப்புளி பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com