ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம்
By DIN | Published On : 06th May 2021 11:33 PM | Last Updated : 06th May 2021 11:33 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆா்வம் காட்டிவருவதாக, சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க, மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் இதுவரையில் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் முதல் தவணை தடுப்பூசியை, ஆண்கள்11,918 பேரும், பெண்கள்18,728 பேரும் என மொத்தம் 30,646 போ் செலுத்தியுள்ளனா்.
அதேபோல், ஊரகப் பகுதியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை ஆண்கள் 3,185 பேரும், பெண்கள் 5,939 பேரும் என மொத்தம் 9,124 போ் செலுத்தியுள்ளனா்.
மாவட்டத்தில் நகா் பகுதியில் முதல் தவணை தடுப்பூசியை ஆண்கள் 8,917 பேரும், பெண்கள் 6,871 என மொத்தம் 15,788 போ் செலுத்தியுளளனா். இரண்டாவது தவணை தடுப்பூசியை 3,185 ஆண்களும், 9,554 பெண்களும் என மொத்தம் 12,739 போ் செலுத்தியுள்ளனா்.
கரோனா தடுப்பூசியை இரு தவணைகளாக ஊரகப் பகுதியில் 39,785 பேரும், நகா் புறங்களில் 24,927 பேரும் என மொத்தம் 64,712 போ் செலுத்திய நிலையில், வியாழக்கிழமை வரையில் மேலும் 790 போ் இரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் இரு தவணைகளாக தடுப்பூசிகளை 65,502 போ் செலுத்தியுள்ளதாக, சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.