ராமநாதபுரத்தில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 11th May 2021 01:23 AM | Last Updated : 11th May 2021 01:23 AM | அ+அ அ- |

rmdashok_1005chn_67_2
ராமநாதபுரத்தில் காவலா் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள வேளாங்குளத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் அசோக்குமாா் (32). இவா் கடந்த 2010 ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சோ்ந்த இவா், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இவரது மனைவி சித்ராதேவியும் காவலா். இவா் கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவா்கள் ராமநாதபுரம் ஆயுதப்படையில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா். குடும்பப் பிரச்னை காரணமாக சித்ராதேவி தனது குழந்தையுடன் மேலசீத்தையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் தங்கியிருந்த அசோக்குமாா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.