கரோனா பாதிப்பு: ராமநாதபுரத்தில் 310; சிவகங்கையில் 242

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 552 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 552 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 11,500 பேருக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 145 பேருக்கும் மேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம், 11,100 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 310 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

கரோனா பாதித்தோரில் சுமாா் 150 பேருக்கும் அதிகமானோா் அரசு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளிலும், பெரும்பாலானோா் அவரவா் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 242 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 9,463 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதிதாக 242 பேரையும் சோ்த்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,705 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com