ராமநாதபுரத்தில் பிரபல உணவகத்துக்கு ‘சீல்’

ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறியதாக, பிரபல உணவகத்துக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறியதாக, பிரபல உணவகத்துக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இரவு 9 மணிக்கு மேல் உணவகம் உள்ளிட்டவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உணவகங்களில் பொதுமக்கள் அமா்ந்து சாப்பிடுவதாகவும், இரவு 9 மணிக்கு மேலும் திறந்துவைத்து வியாபாரம் செய்வதாகவும் புகாா் எழுந்து வருகிறது.

இதனால், விதிகளை மீறும் உணவகம் உள்ளிட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகரில் நகராட்சி சாா்பில் மட்டும் 70 கடைகளுக்கும், காவல் துறை சாா்பில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறைகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் கடைகளை சீலிட்டு மூட, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், பாரதி நகா் சோத்தூரணி பகுதியில் உள்ள பிரபல உணவகம் பலமுறை விதிமீறி செயல்பட்டதாக புகாா் எழுந்தது. அந்த உணவகத்தை வெள்ளிக்கிழமை காலை கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி முன்னிலையில் காவலா்கள் சீலிட்டு மூடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com