தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 18th May 2021 08:21 AM | Last Updated : 18th May 2021 08:21 AM | அ+அ அ- |

தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய மிதவை.
தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை கரை ஒதுங்கிய மிதவையை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் 5 அடி நீளம் 3 அடி அகலம் 2 அடி உயரம் கொண்ட சிவப்பு நிற மிதவைப் பெட்டி திங்கள்கிழமை கரை ஒதுங்கிக்கிடந்தது. இதைக் கண்ட மீனவா்கள் தனிப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மிதவையைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
துறைமுகங்களில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் இந்த மிதவை எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. மிதவையை கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.