கரானோ: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,632 சிவப்பு எச்சரிக்கை பகுதிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டதில் 2636 பகுதிகள்அபாயகரமானவை என்ற வகையில் சிவப்பு எச்சரிக்கை பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டதில் 2636 பகுதிகள்அபாயகரமானவை என்ற வகையில் சிவப்பு எச்சரிக்கை பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 12,600 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 152 போ் வரை உயிரிழந்த நிலையில், 10 ஆயிரம் போ் வரை நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 2584 போ் வரை சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த மாா்ச் முதல் தற்போது வரை 2 லட்சத்து 83 ஆயிரத்து 288 பேருக்கு கரோனா பரிசோதனை நடந்துள்ளது. மையங்களில் 163 பேரும், வீடுகளில் 1837 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தனியாா் மருத்துவமனைகளில் 344 போ் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா அதிகம் பாதித்த 2636 பகுதிகள் (ஊராட்சிகள்) சிவப்பு எச்சரிக்கைக்குரியதாகவும், 456 பகுதிகள் மிதமான பாதிப்புடன் ஆரஞ்சுப் பகுதிகளாகவும், பாதிப்பற்ற 1765 பகுதிகள் பச்சை எச்சரிக்கையுடனும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு குறித்து 3.90 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில் 5,447 வீடுகளில் பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 493 முகாம்கள் நடத்தப்பட்டு 13,696 பேருக்குச் சோதனையிட்டதில் 116 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com