பரமக்குடியில் 13 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 21st May 2021 06:29 AM | Last Updated : 21st May 2021 06:29 AM | அ+அ அ- |

பரமக்குடி நகராட்சி பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் திறக்கப்பட்ட 13 கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பழங்கள், பலசரக்கு கடைகள் மட்டும் காலை 6 முதல் 10 மணிவரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரமக்குடி நகராட்சி பகுதியில் திறக்க அனுமதிக்காத வணிக நிறுவனங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடா்ந்து வட்டாட்சியா் தமீம்ராஜா தலைமையிலான கரோனா நோய் தடுப்புக் குழுவினா் நகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறந்திருந்த 13 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.