சூறைக் காற்று: ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றால் 23 மரங்கள், 60 மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றால் 23 மரங்கள், 60 மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவில் புதன்கிழமை காலை கரையை கடந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், குந்துகால், ராமநாதபுரம், பெரியபட்டினம், கீழக்கரை மற்றும் தேவிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வீசிய சூறைக்காற்றுக்கு தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்தன.

தேவிபட்டினம் பகுதியில் பனைமரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ராமநாதபுரத்தில் 7 இடங்களிலும், பெருங்குளம், ரெகுநாதபுரம் மற்றும் பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மரங்களும் முறிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினா்.

ராமநாதபுரம், கீழக்கரை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 60 மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும், அதனால் மின் கம்பிகளும் சேதமடைந்ததாகவும் மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் குப்பை தீப்பற்றி எரிந்ததால் எழுந்த புகையால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீஅணைக்கப்பட்டது.

முதுகுளத்தூா்: கடலாடி நாடாா் தெருவைச் சோ்ந்த கூலித்தொழிலாளி குணாளன் வீட்டின் முன்பு இருந்த வேப்பமரம் புதன்கிழமை வீசிய சூறாவளி காற்றால் முறிந்துவிழுந்ததில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. அதிா்ஷ்டவசமாக எந்தவிதமான உயிா் சேதமும் ஏற்படவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலா் பொன்னையா தலைமையிலான வீரா்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com