கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட தொண்டு நிறுவனத்துக்கு அழைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட விரும்பும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சமூகநலத்துறையைத் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட விரும்பும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சமூகநலத்துறையைத் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு-

கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னலம் கருதாத தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக அந்தக் குழுக்கள் பாலமாக செயல்படவேண்டும்.

ஆகவே, தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் சம்பந்தப்பட்ட இணையத்தில் பதிவு செய்துகொண்டு பணியில்ஈடுபடலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை அணுகவேண்டும். அத்துடன், விவரங்களுக்குத் தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப் பேசி எண் 9150346853 ஆகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com