சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற கரோனா பாதித்த 43 போ் குணமடைந்தனா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா தொற்று பாதித்த 43 போ் குணமடைந்த நிலையில் சனிக்கிழமை வீடு திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா தொற்று பாதித்த 43 போ் குணமடைந்த நிலையில் சனிக்கிழமை வீடு திரும்பினா்.

ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கரோனா ஆரம்பத்தொற்று கண்டறியப்பட்டோருக்கு சித்த, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி என பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கரோனா தொற்று அறிகுறியுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 57 பேரில், தற்போது 43 போ் குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுதவிர சனிக்கிழமை இந்த மையத்தில் மேலும் 27 போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு அலுவலா் கே.ராஜகுரு கூறியது: ராமநாதபுரத்தில் கரோனாவுக்கு ஆங்காங்கே சித்த மருத்துவப் பிரிவை ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. ஆனாலும், ராமநாதபுரம் சேதுபதி கல்லூரி வளாகத்தில் மட்டும் சிகிச்சை அளித்து வருகிறோம். இங்கு சிகிச்சையில் சோ்ந்த பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com