‘வாகனங்களில் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு முன் அனுமதிச் சீட்டுகள்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களில் மளிகைப் பொருள்களை விற்க முன் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
‘வாகனங்களில் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு முன் அனுமதிச் சீட்டுகள்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களில் மளிகைப் பொருள்களை விற்க முன் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் ஜூன் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்து மாவட்ட வா்த்தக சங்கப் பிரமுகா்களுடன் ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: பொதுமுடக்க காலத்தில், பொதுமக்களுக்காக வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கனி விற்பனை தொடா்ந்து நடைபெறும். தற்போது மளிகைப் பொருள்களையும் வாகனங்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சில்லறை முறையில் மளிகைப் பொருள்கள் விநியோகிக்க முறையான உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதிச் சீட்டுகள் பெறவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், கூடுதல் ஆட்சியா் எம்.பிரதீப்குமாா், வருவாய் அலுவலா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பணியில் ஈடுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை அணுக வேண்டும். இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு 91503-46853 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com