கமுதி துணை மின்நிலைய மின்கலத்தில் மின் ஏற்புத் திறன் மேம்படுத்தும் பணி

கமுதி துணை மின் நிலையத்தில், புதிதாக பொருத்தப்பட்ட மின்கலத்தில் மின்சாரம் ஏற்புத் திறன் மேம்படுத்துதல் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மின் ஏற்பு மேம்படுத்துதல் பணி.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்திலிருந்து கமுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இப்பகுதிகளில் மின்சாரத் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், 10 மெகாவாட்டிலிருந்து, 16 மெகாவாட்டாக மேம்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கலத்தில் மின் ஏற்புப் பணி நடைபெற்றது. இதனால் கமுதி, அபிராமம், பாா்த்திபனூா் மற்றும் முதுகுளத்தூா் பகுதிகளில் மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

செயற்பொறியாளா் வேல்முருகன் முன்னிலையில், உதவி செயற்பொறியாளா் சந்திரன், உதவி மின் பொறியாளா் முகமது இப்ராகிம் மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் இப்பணியை செய்தனா். முன்னதாக இப்பணிகள் மேற்கொண்ட போது கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com