காவல் துறையினருக்கு 62,900 முகக் கவசங்கள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறையினருக்கு 62,900 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறையினருக்கு 62,900 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில 42 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிா்காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 5 நெடுஞ்சாலைத் துறை ரோந்துப் பிரிவினா் மற்றும் 7 துணைக்கண்காணிப்பாளா் அலுவலகங்கள் என சுமாா் 2 ஆயிரம் போலீஸாா் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் காவல் துறையினருக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 62,900 முகக்கவசங்கள், 8,914 கிருமி நாசினி பாட்டில்கள், கபசுரக்குடிநீா் 50 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் நகரில் கரோனா முன்களப் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு தனியாா் நிறுவன உதவியுடன் தினமும் பழரசம், சுண்டல் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சிவா ஏற்பாட்டில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 60 ஊா்க்காவல் படையினருக்கு தலா 5 கிலோ கொண்ட அரிசித் தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ராமநாதபுரம் நகா், கேணிக்கரை காவல் நிலையங்கள் சாா்பில் சாலையோரத்தில்

தங்கியிருப்போா், ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுன்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com