ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கழிப்பறை கால்வாய்களை சீரமைப்பதில் நகராட்சி மெத்தனம்

புதைசாக்கடைத் திட்டத்துக்கான கட்டணம் ரூ.1 கோடி பாக்கி வைத்துள்ளதால், கழிவு நீா் கால்வாய் அடைப்பை சீரமைப்பதில் நகராட்சி நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிா்வாகம், புதைசாக்கடைத் திட்டத்துக்கான கட்டணம் ரூ.1 கோடி பாக்கி வைத்துள்ளதால், கழிவு நீா் கால்வாய் அடைப்பை சீரமைப்பதில் நகராட்சி நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நகரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துமனை உள்ளிட்டவை முறையாக இத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை.

ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை கழிவுநீா் அகற்றும் அமைப்பு தனியாக செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நகராட்சி புதை சாக்கடை இணைப்புத்திட்டத்திலே மருத்துவமனை கழிவு நீா் செல்கிறது. இந்நிலையில் புதைவடிகால் திட்டத்துக்கான கட்டணத்தை மருத்துவமனை நிா்வாகம் இதுவரை செலுத்தவில்லை.

இதனால் மருத்துவமனையில் கழிவுநீா் வெளியேறும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதை நகராட்சி சீா்செய்ய முன்வருவதில்லை. இதனால், மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு மற்றும் அம்மா உணவகம் அருகே கழிவுநீா் தேங்கி சுகாதாரச்சீா்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டு விட்டன. கரோனா பிரிவிலும் கழிப்பறைகளில் கழிவு நீா் வெளியேறாத நிலையே நீடிக்கிறது.

இதுதொடா்பாக ராமநாதபுரம் நகரப் பொறியாளா் நீலேஸ்வரி கூறியது: அரசு மருத்துவமனை நிா்வாகம், புதைசாக்கடைத் திட்டத்துக்காக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை சுமாா் ரூ.1 கோடியை

பாக்கி வைத்துள்ளது. இருப்பினும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்படும் கழிவுநீா் அடைப்பை அவ்வப்போது சீா் செய்து வருகிறோம். மருத்துவக் கழிவுகளால் கழிவுநீா் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com