ராமநாதபுரத்தில் பொதுமுடக்க விதிமீறல்: ரூ.1.28 கோடி அபராதம் வசூல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக ரூ.1.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக ரூ.1.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க விதிகளை மீறிச் செயல்படுவோா் மீதும், கடை உள்ளிட்டவை மீதும் காவல், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறையினா் அபராதம் வசூலித்து வருகின்றனா். பொது சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ரூ.34,37,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. காவல் துறை சாா்பில் ரூ.66,99,400 அபராதமாகவும், வருவாய்த் துறை சாா்பில் ரூ.10,44,200 மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.16,43,000 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பைக் கண்டறியும் வகையில், கிராமப்புறங்களில் மட்டும் 3 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நகா் பகுதியில் 80 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தற்போது 5,583 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அவா்களைத் தனிமைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை அடையாளம் காட்டும் வகையில், 2,525 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 3 நாள்களாக கரோனா பரவல் அதிகரித்துள்ள சிவப்பு எச்சரிக்கை பகுதிகளாக 1,077 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது வியாழக்கிழமை நிலவரப்படி 372 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை பகுதிகளாகவே உள்ளன.

மாவட்டத்தில் மிதமான கரோனா பரவலுக்குள்ளான ஆரஞ்சு எச்சரிக்கையாக 1,315 பகுதிகள் அறிவிக்கப்பட்டன. அதில், 441 பகுதிகள் வியாழக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கைக்குரியதாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்புக்குள்ளாகாத 4,115 பகுதிகள் பசுமைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 1,712 பகுதிகள் வியாழக்கிழமை வரையில் பசுமைப் பகுதிகளாகவே இருந்ததாக, சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டபோது, அவா் கூறியது: பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அபராதம் விதித்தல், தீவிர கண்காணிப்பு மூலமே கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. கரோனா பாதித்தோருக்கான சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்படுவதால் உயிரிழப்பு மிகவும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com