ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நாளில் 494.56 டன் காய்கறிகள் விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் வாகனங்கள் மூலம் மலிவு விலை தொகுப்பு காய்கறிகள் 494.56 டன் விற்பனையாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் வாகனங்கள் மூலம் மலிவு விலை தொகுப்பு காய்கறிகள் 494.56 டன் விற்பனையாகியுள்ளன.

பொதுமுடக்க காலத்தில் ராமநாதபுரத்தில் மக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவின்பேரில், வேளாண்மைத் துறை மூலம் வாகனங்களில் வீடு வீடாகச் சென்று காய்கறிகளை விநியோகிக்கும் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கிய காய்கறி விற்பனைத் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1,595 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 93 வாகனங்களே காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை மட்டும் 213.5 டன் காய்கறிகள் விற்கப்பட்டதாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கடந்த 24 முதல் 28 ஆம் தேதி வரையில், மாவட்ட அளவில் 494.56 டன் காய்கறிகள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் நகரில் கட்செவி அஞ்சலில் முன்பதிவு செய்தவா்களுக்காக தினமும் 200 கிலோ காய்கறிகள் வீடு வீடாகச் சென்று விற்கப்பட்டதாகவும், மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com